என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒருவர் பலி"
அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஏராளமான வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். மோதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
காளி பாரி பகுதியில் நேற்று பிற்பகல் பள்ளிவாசலுக்கு முன்பு ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் வன்முறையாக மாறி, கலவரமாக வெடித்தது. இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. மோதல் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அமைதியாகவும் இணக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றும், அமைதியை சீர்குலைக்கும் பிரிவினை சக்திகளை அனுமதிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் எதிராக செயல்படும் சக்திகள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
காத்மாண்டு:
நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்பில் அதன் அருகே இருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் வீட்டு கதவுகள் அதிர்ந்தன. #Bombblast
லாலாபேட்டை:
பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயராமபாண்டியன் (வயது 59) என்பவர் ஆமினி வேனை ஓட்டி வந்தார். வேன் நேற்று முன்தினம் கோவையில் இருந்து திருநல்லார் சென்ற பின்னர் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
திருச்சி-கருர் தேசிய நெடுஞ் சாலையில் மகாதான புரம் பெட்ரோல்பங்க் அருகில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் (41) என்பவர் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த சந்திரசேகர் (62) சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும் கோவையைச் சேர்ந்த பத்மாவதி (56), சோனியா (29), சரண்யா(27), நிவேதா (27), உஷாநந்தினி(29) விஷ்ணு (29) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த சந்திரசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
பெங்களூருவில் இருந்து நேற்று இரவு சேலம் மாவட்டம் வழியாக பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. படுக்கை வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் 28 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ்சை சேலம் மாவட்டம் தாரமங்கலம், நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு பஸ் சேலம் கொண்டலாம் பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி தலைகீழாக பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் பயத்தால் அலறினார்கள்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த திருப்பூர், ஜம் ஜம் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் தனசேகரன் (வயது 42) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் சரவணன், துரைசாமி, அஸ்வின், அபினாஸ், திஸ்முகமது உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
பஸ் இடிபாடுகளில் சிக்கியவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சேர்ந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுக்கு முகம், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு இருந்தது. வலியால் அய்யோ, அம்மா என கதறியபடி இருந்தனர். பயணிகள் சிலர் பதட்டத்துடனே இருந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 4 பேர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் 5 கிரேன்கள் மூலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து விசாரணை நடத்தியதில் பஸ்சின் மேற்கூரையில் அதிக பொருட்கள் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
காயம் அடைந்த பயணிகள் கூறுகையில், நாங்கள் எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டோம். கடவுளுக்கு நன்றி கண்ணீர் மல்க என்றனர்.
அப்போது அங்குவந்த ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க வந்த போலீசாரையும் அவர் கத்தியால் குத்த முயன்றதால் கார் டிரைவர் என கருதப்படும் அந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். #Onekilled #Melbournestabbing
ஆலங்குளம்:
நெல்லையில் இருந்து இன்று காலை தென்காசிக்கு ஒன் டூ ஒன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் நிலையத்தில் தென்காசிக்கு காத்திருந்ததால் ஏராளமான பயணிகள் இந்த பஸ்சில் ஏறினர்.
வழக்கத்தை விட ஒரு மடங்கு அதிகமான பயணிகள் பஸ்சில் ஏறினர். மொத்தம் 90 பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ்சை டிரைவர் விசாக கணேசன் ஓட்டினார். கபாலி கண்டக்டராக இருந்தார். பஸ் சாலையில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் சென்றது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவித அச்சத்துடனே பயணித்தனர்.
சிலர் டிரைவர், கண்டக்டரிடம் மெதுவாக செல்லுமாறு கூச்சலிட்டனர். எனினும் பஸ்சின் வேகம் குறைய வில்லை. பஸ் ஆலங்குளம் ஊரின் கீழ்புறம் சிவலார் குளம் விலக்கு அருகே சென்றபோது முன்னால் ஒரு பள்ளி பஸ் சென்றது. அதை அரசு பஸ் முந்த முயன்றது. இந்த வேளையில் முன்னால் சென்ற பள்ளி பஸ் பிரேக் போட்டதால் அரசு பஸ்சை டிரைவர் ஓரமாக திருப்பினார். இதனால் பஸ் ரோட்டோரம் கவிழ்ந்தது.
இதில் பஸ் இருந்த 30 பயணிகளுக்கு பலத்த காயமும், 60 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 90 பயணிகளும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்தார்கள். பஸ்சில் பயணம் செய்த கடையநல்லூர் அருகேயுள்ள சிவராம்பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் (83) சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த அவரது மனைவி கோமதியம்மாளுக்கும் காயம் ஏற்பட்டது. #busaccident
மத்தியபிரதேச மாநிலம் டேட்டியா நகரில் மாவட்ட ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் ஒரே ஊசியை நர்சு பயன்படுத்தினார்.
மேலும் ஊசி சிரஞ்சை டிஸ்டில்லரி வாட்டர் மூலம் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தி அவர் சுத்தப்படுத்தி உள்ளார்.
இதனால் அவரிடம் ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்